Posts

Showing posts from July, 2023

"சக்ரவியூஹம்" - (தெலுங்கு) திரைப்படத்தின் விவரம்!

Image
ஒரு பெரிய பணக்காரங்க வீட்ல ஓனர் அம்மா (சின்ன வயசு தான்) செத்து கெடக்காங்க, அவங்கள யாரு எதுக்காக கொன்னாங்க அது தான் கதை. உண்மையாவே ஸ்டோரி பிளாட் அப்புறம் கிளைமாக்ஸ் டிவிஸ்ட்ம் நல்லா தான் இருக்கு. ஆனா மேக்கிங்ல சொதப்பிட்ட மாறி ஒரு பீல். ஹிந்தி நாடகத்த தெலுங்குல எடுத்து அதையும் தமிழ்ல டப்பிங் பண்ண மாறி இருக்கு. பட்ஜெட் கன்ஸ்டரைண்ட் அப்பட்டமா தெரியுது. எல்லா சீன்ஸும் இருட்டாவே தான் இருக்கு. விசாரணை சீன்ஸ்அ வித்தியாசமா காட்றாங்க அவ்வளவு தான். இந்த படம் இப்போ நமக்கு தமிழ்லையும் இருக்கு. நேரம் இருந்தா அமேசான்ல பாருங்க!

"தண்டட்டி" - திரைப்படத்தின் விவரம்!

Image
காணாம போன அப்பத்தாவ (ரோஹிணி) கண்டுபிடிக்க போலீஸ் கிட்ட கம்பிளைன்ட் குடுக்குறாங்க. அந்த ஊருக்கு போலீஸ் யாரும் போக மாட்ராங்க, ஆனா பசுபதி மட்டும் தேட போறாரு. ஆனா ரோஹிணி இறந்துடுறாங்க. அவங்க காதுல இருந்த தண்டட்டி காணாம போய்டுது. அத யாரு எடுத்தானு கண்டு புடிக்கிறது தான் கதை. காமெடி, சென்டிமென்ட் ரெண்டும் கலந்து பண்ணி இருக்காங்க. காமெடி அங்க இங்கையும், சென்டிமென்ட் கடைசிலயும் தான் ஒர்க் அவுட் ஆகுது. க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் நல்லா இருந்தாலும், நம்ப முடியல. நேரம் இருந்தா பாருங்க அமேசான்ல!

"சின்க்" - திரைப்படத்தின் விவரம்!

Image
பாண்டிச்சேரி டூர் போய்டு வரப்போ பிராங்க் செய்ரெனு சொல்லிட்டு ஒரு பொண்ண வண்டியில இடிச்சு சாக அடிசிட்ராங்க ஒரு 4 பேர் சேந்த ஃப்ரெண்ட்ஸ் குருப். அப்புறம் அவங்க அவங்க வீட்டுக்கு போயிட்டு வீடியோ கால்ல பேசிக்கிறாங்க. படமே 90 நிமிஷம் தான் அதுல 80 நிமிஷம் வீடியோ கால் தான். ஹாரார் சம்பரதாயம் சீன்ஸ் சிலது வச்சு படத்த முடிச்சிட்டாங்க. டயலாக் பேப்பர்ல 100 முறை f**k எழுதிட்டு நடு நடுல சில வார்த்தைகளை போட்டு பேசி இருக்காங்க. Duration கம்மி அதுனால பாக்கலாம், ஆஹா app ல!

"அநீதி" - திரைப்படத்தின் விவரம்!

Image
டெலிவரி பாய் ஆ இருக்கிற ஹீரோ, மெண்டலி கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகுறாரு. அந்த நேரத்துல ஹீரோயின் அறிமுகம் கிடைக்குது. அவங்களுக்கு உதவ போய் ஒரு பெரிய பிரச்சினைல மாட்டிகிராரு. எப்டி மாட்டுனாரு, அதுல இருந்து எப்டி மீண்டாரு அது தான் கதை. எல்லா உணர்வும் சம அளவுல இருந்த மாறி ஒரு ஃபீல். அப்பா சென்டிமென்ட் எனக்கு ஹைலைட். காளி வெங்கட் பிரமாதம். போலீஸ் அடிக்கிறப்போ "அப்பா"ன்னு கத்துனது புதுமை. இரண்டாம் பாதி சூப்பர். முதல் பாதி சுமார். தியேட்டர் ல பாத்து சப்போர்ட் பண்ணா இந்த மாதிரி படங்கள் இன்னும் வர வாய்ப்பா இருக்கும், பாருங்க!

"கொலை" - திரைப்படத்தின் விவரம்! "Kolai Movie Review"

Image
 திரும்பவும் பூட்டி கிடக்குற வீட்டுக்குள்ள ஒரு பொண்ணு டெட்பாடி இருக்கு. அந்த கொலையை  யாரு பண்ணா அப்டினு கண்டுபுடிக்க அவரால மட்டும் முடியும்னு சொல்றாங்க, அதோட அந்த மாறி மூளையை துரு பிடிக்க விடக்கூடாதுனு, சொல்லி விஜய் ஆண்டனிய காட்றாங்க. அவரு வந்து கண்டு பிடிச்சாரான்னு சொல்றது தான் இந்த கதை. உண்மையாவே technically brilliant, எல்லா டிபார்ட்மென்ட்-ம். ஆனா கதையும், திரைக்கதையும் டைடல் பார்க் சிக்னல் மாறி ரொம்ப slow ஆ தான் போகுது. அங்க இங்க கொஞ்சம் கட்டிங் போட்டு ஷார்ப் பண்ணி இருக்கலாம், ஆனா பண்ணல. எதோ ஒரு ஸ்டைல் ட்ரை பண்ணி இருக்காங்க பட் பர்சனல்-ஆ எனக்கு செட் ஆகல. நீங்க பாத்துட்டு சொல்லுங்க. 1.5x  ஸ்பீட்ல பாத்தா நல்ல இருக்கலாம் அமேசான்-ல! தங்கத்துல சமோசா செஞ்சி உள்ள உருள கிழங்கு இல்லனா எப்படி இருக்கும், அப்டி தான் இங்கயும்!

"ஜானகி ஜானே" - திரைப்படத்தின் விவரம்! Janaki Jaane Movie Review

Image
 சின்ன வயசுல நடந்த ஒரு விஷயத்தால இருட்டுனாலே பயப்புடற ஹீரோயின். இந்த உண்மை தெரிஞ்சி கல்யாணம் பண்ணிக்கிற ஹீரோ. இந்த பயத்த ஒரு கட்சி அரசியல் லாபத்துக்காக தப்பா frame பண்ணிடறாங்க. இந்த பயத்துலேந்தும், பிரச்னைலேந்தும் ஹீரோயின் மீண்டாங்கலா இல்லையா அது தான் கதை. காமடியா ஆரம்பிச்சி, நடுல செண்டிமெண்ட் ஆகி கடைசில பீல் குட் ஆ முடிச்சி இருக்காங்க. முழு படமும் 2 மணி நேரம் தான். மலையாள படம் தான் ஆனா நமக்கு தமிழ்லையும் இருக்கு ஹாட் ஸ்டார்ல. நேரம் இருந்தா பாருங்க!

"இரை" - வெப் சீரிஸ் விவரம்

Image
தேர்தல் நேரத்துல ஒரு கட்சியோட தலைவர் கடத்தப்படுறார். அவர யார் எதுக்கு கடத்துனாங்க அது தான் கதை. Child abuse பத்தின கதை, அதனால அடல்ட் சீன்ஸ் அங்கங்க இருக்கத்தான் செய்யுது. மொத்தமா 6 எபிசோட்ஸ், ஒன்னொன்னும் சுமார் 45 நிமிஷம். திரைக்கதை முன்னும் பின்னும் போற மாதிரி காட்டுறாங்க, முதல்ல குழப்பினாலும் அப்ரமா நமக்கு செட் ஆகிடுது. கலர் டோன்ல வித்தியாச படுத்தி இருக்காங்க. பரபரப்பா போகலனாலும், விறுவிறுப்பா போய்டுது. ஸ்பெஷல் டாஸ்க் பண்ண வர போலீஸ்க்கு எப்பவும் ஒரு மென்டல் இல்நஸ் இருக்கற மாதிரி இதுலயும் காட்றாங்க. தூங்காவனம் எடுத்த டைரக்டர் அதுனால தூங்காம கொண்டு போயிடுறாரு கதைய. நேரம் கிடைக்கும்போது பாருங்க ஆஹா Appல!

மாவீரன் - திரைப்படத்தின் விவரம்!

Image
எல்லாத்துக்கும் பயப்படுற ஹீரோ ஒரு அரசியல்வாதிய எதிர்த்து தன் கூட இருக்கிற மக்களை எப்படி காப்பாத்துறாரு அப்படிங்கறத கொஞ்சம் பேண்டஸி கொஞ்சம் காமெடி கலந்து சொல்லி இருக்கிற படம் தான் மாவீரன். உண்மையாவே முதல் பாதி நல்ல ஜாலியா போயிடுது. இரண்டாம் பாதி எப்படி எங்க போய் முடிக்கிறது அப்படின்னு புரியாம முழிச்சி ஒரு வழியா படத்தை முடிக்கிறாங்க. படத்தோட நீளம் உண்மையாவே ஜாஸ்தி ஒரு 15 நிமிஷம் தூக்கி இருக்கலாம். யோகி பாபு எப்டி use பண்ணனும்னு இந்த டைரக்டர் மட்டும் தெரிஞ்சு இருக்கு. மொத்தமா சொல்லனும்னா படம் பாக்கலாம்! நீளம் உங்களுக்கு பிரச்சினை இல்லைனா!

"ஹவா" - பெங்காலி திரைப்படத்தின் விவரம்!

Image
 ஒரு 10 நாள் கடலுக்குள்ள இருந்து நிறைய மீன புடிச்சிட்டு வரலாம்னு கெளம்புறாங்க ஒரு 7-8 பேரு. கொஞ்சம் உள்ள போனதுக்கு அப்புறம் வலைல ஒரு பொண்ணு கிடைக்குது. முதல்ல மூச்சு பேச்சு இல்லாம இருக்கு, அப்புறம் பாத்தா அந்த பொண்ணு உயிரோட தான் இருக்கு. அந்த பொண்ணு யாரு, எப்படி அங்க வந்துச்சு, வந்ததுக்கு அப்புறம் படகுல என்னென்ன ஆச்சு அதான் கதை. மொத்த படமும் படகு, கடல் அதுக்குள்ள தான். மொத 1 மணி நேரம் அநியாயத்துக்கு மெதுவா போகும்; அதுக்கப்புறம் கொஞ்சம் மெதுவா போகும். ஆக மொத்தத்துல படம் ஸ்லோவா தான் போகும். ஒரு வித்தியாசமான முயற்சி. இது ஒரு பெங்காலி  படம். நமக்கு தமிழ்லையும் இருக்கு சோனி LIVல. கடல் சம்பந்தமான படம் பாக்க பிடிக்கும்னா பாருங்க.

உங்களுக்கு ஒன்னு தெரியுமா?

Image
உங்களுக்கு உண்மையா என்ன பிடிக்கும்னு உங்களுக்கே தெரியுமா? ஏன் கேக்குறேன்னா...! முன்னாடிலாம் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடகர் அதாங்க சிங்கர் யாருனு கேட்டா யோசிக்காம பட்டுனு SPB னு சொல்லுவேன். அவரு மிக பெரிய லெஜெண்ட் தான் அதுல எந்த மாற்றமும் இல்ல. பொதுவா ஒரு 5 பேரு இருக்குற எடத்துல உங்களுக்கு பிடிச்ச பாடகர் யாருனு கேட்டா அதுல 3 பேரு கண்டிப்பா அவரு பேரு தான் சொல்லுவாங்க. மீதி 2 பேரும் அவரையும் பிடிக்கும் அதுக்கு அப்புறம் இன்னொரு பாடகரும் பிடிக்கும்னு இன்னொருத்தர் பேரும் சேத்து சொல்லுவாங்க. இந்த மாறி பெருவாரியான மக்கள் ஒருத்தர பிடிக்கும்னு சொல்றதால நாமளும் சில நேரம் நமக்கும் அவரேதான் பிடிக்கும்னு சொல்லிடுவோம், நம்மள அறியாமலேயே! உண்மையா நமக்கு இன்னொருத்தர் தான் பிடிக்கும் அது நமக்கே தெரியாது நாமளே அத உணர வரைக்கும். இப்டி தான் ஒரு நாள் cab புக் பண்ணி போறப்போ டிரைவர் பாட்டு போட்டுட்டு வந்தாரு. லைன்ஆ எனக்கு பிடிச்ச பாட்டு தான் - எப்படிடா இதுனு நினைக்கிறப்போ அந்த playlist ஒரு குறிப்பிட்ட பாடகரோடது. ஆமா அது ஹரிஹரன். இப்போ நமக்கு பிடிச்ச பாடகர் பாடுனது நமக்கு பிடிச்சு இருக்கனும் இல்ல நமக்கு பிடிச்ச எல