உங்களுக்கு ஒன்னு தெரியுமா?
உங்களுக்கு உண்மையா என்ன பிடிக்கும்னு உங்களுக்கே தெரியுமா? ஏன் கேக்குறேன்னா...! முன்னாடிலாம் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடகர் அதாங்க சிங்கர் யாருனு கேட்டா யோசிக்காம பட்டுனு SPBனு சொல்லுவேன். அவரு மிக பெரிய லெஜெண்ட் தான் அதுல எந்த மாற்றமும் இல்ல. பொதுவா ஒரு 5 பேரு இருக்குற எடத்துல உங்களுக்கு பிடிச்ச பாடகர் யாருனு கேட்டா அதுல 3 பேரு கண்டிப்பா அவரு பேரு தான் சொல்லுவாங்க. மீதி 2 பேரும் அவரையும் பிடிக்கும் அதுக்கு அப்புறம் இன்னொரு பாடகரும் பிடிக்கும்னு இன்னொருத்தர் பேரும் சேத்து சொல்லுவாங்க. இந்த மாறி பெருவாரியான மக்கள் ஒருத்தர பிடிக்கும்னு சொல்றதால நாமளும் சில நேரம் நமக்கும் அவரேதான் பிடிக்கும்னு சொல்லிடுவோம், நம்மள அறியாமலேயே! உண்மையா நமக்கு இன்னொருத்தர் தான் பிடிக்கும் அது நமக்கே தெரியாது நாமளே அத உணர வரைக்கும். இப்டி தான் ஒரு நாள் cab புக் பண்ணி போறப்போ டிரைவர் பாட்டு போட்டுட்டு வந்தாரு. லைன்ஆ எனக்கு பிடிச்ச பாட்டு தான் - எப்படிடா இதுனு நினைக்கிறப்போ அந்த playlist ஒரு குறிப்பிட்ட பாடகரோடது. ஆமா அது ஹரிஹரன். இப்போ நமக்கு பிடிச்ச பாடகர் பாடுனது நமக்கு பிடிச்சு இருக்கனும் இல்ல நமக்கு பிடிச்ச எல்லா பாட்டும் பாடுன பாடகர் நமக்கு பிடிச்சவரா இருக்கனும் அப்படித்தானே! அப்போ எனக்கு பிடிச்சது எல்லாருக்கும் பிடிச்ச SPB ஆ 😕இல்ல எல்லா பிடிச்ச பாட்டும் பாடுன ஹரிஹரன் ஆ! 😕உங்களுக்கும் இந்த மாறி இருக்கலாம் நீங்களும் கொஞ்சம் யோசிச்சி பாருங்க! 😇
Comments
Post a Comment