Posts

"இன்" (2022) - மலையாள திரைப்படத்தின் விவரம்!

Image
 பூட்டி இருக்குற வீட்டுக்குள்ள நுழைஞ்சு வீடெல்லாம் சுத்தம் பண்ணி பாத்துக்குறான், ஆனா வீட்டு சொந்தகாரங்க வந்து கேள்வி கேட்டா கொன்னுடறான் ஒரு சைக்கோ. அவனை பிடிக்கிறது தான் கதை. படத்துல ஹீரோ இல்ல, ஹீரோயின் மட்டும் தான். படத்தோட நீளம் கம்மியா இருக்கறதுனால போர்-ஆ தெரியல. நேரம் இருந்தா பாருங்க, மலையாளத்துல மட்டும் தான் இருக்கு படம் மனோரமா மேக்ஸ்ல!

"சக்ரவியூஹம்" - (தெலுங்கு) திரைப்படத்தின் விவரம்!

Image
ஒரு பெரிய பணக்காரங்க வீட்ல ஓனர் அம்மா (சின்ன வயசு தான்) செத்து கெடக்காங்க, அவங்கள யாரு எதுக்காக கொன்னாங்க அது தான் கதை. உண்மையாவே ஸ்டோரி பிளாட் அப்புறம் கிளைமாக்ஸ் டிவிஸ்ட்ம் நல்லா தான் இருக்கு. ஆனா மேக்கிங்ல சொதப்பிட்ட மாறி ஒரு பீல். ஹிந்தி நாடகத்த தெலுங்குல எடுத்து அதையும் தமிழ்ல டப்பிங் பண்ண மாறி இருக்கு. பட்ஜெட் கன்ஸ்டரைண்ட் அப்பட்டமா தெரியுது. எல்லா சீன்ஸும் இருட்டாவே தான் இருக்கு. விசாரணை சீன்ஸ்அ வித்தியாசமா காட்றாங்க அவ்வளவு தான். இந்த படம் இப்போ நமக்கு தமிழ்லையும் இருக்கு. நேரம் இருந்தா அமேசான்ல பாருங்க!

"தண்டட்டி" - திரைப்படத்தின் விவரம்!

Image
காணாம போன அப்பத்தாவ (ரோஹிணி) கண்டுபிடிக்க போலீஸ் கிட்ட கம்பிளைன்ட் குடுக்குறாங்க. அந்த ஊருக்கு போலீஸ் யாரும் போக மாட்ராங்க, ஆனா பசுபதி மட்டும் தேட போறாரு. ஆனா ரோஹிணி இறந்துடுறாங்க. அவங்க காதுல இருந்த தண்டட்டி காணாம போய்டுது. அத யாரு எடுத்தானு கண்டு புடிக்கிறது தான் கதை. காமெடி, சென்டிமென்ட் ரெண்டும் கலந்து பண்ணி இருக்காங்க. காமெடி அங்க இங்கையும், சென்டிமென்ட் கடைசிலயும் தான் ஒர்க் அவுட் ஆகுது. க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் நல்லா இருந்தாலும், நம்ப முடியல. நேரம் இருந்தா பாருங்க அமேசான்ல!

"சின்க்" - திரைப்படத்தின் விவரம்!

Image
பாண்டிச்சேரி டூர் போய்டு வரப்போ பிராங்க் செய்ரெனு சொல்லிட்டு ஒரு பொண்ண வண்டியில இடிச்சு சாக அடிசிட்ராங்க ஒரு 4 பேர் சேந்த ஃப்ரெண்ட்ஸ் குருப். அப்புறம் அவங்க அவங்க வீட்டுக்கு போயிட்டு வீடியோ கால்ல பேசிக்கிறாங்க. படமே 90 நிமிஷம் தான் அதுல 80 நிமிஷம் வீடியோ கால் தான். ஹாரார் சம்பரதாயம் சீன்ஸ் சிலது வச்சு படத்த முடிச்சிட்டாங்க. டயலாக் பேப்பர்ல 100 முறை f**k எழுதிட்டு நடு நடுல சில வார்த்தைகளை போட்டு பேசி இருக்காங்க. Duration கம்மி அதுனால பாக்கலாம், ஆஹா app ல!

"அநீதி" - திரைப்படத்தின் விவரம்!

Image
டெலிவரி பாய் ஆ இருக்கிற ஹீரோ, மெண்டலி கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகுறாரு. அந்த நேரத்துல ஹீரோயின் அறிமுகம் கிடைக்குது. அவங்களுக்கு உதவ போய் ஒரு பெரிய பிரச்சினைல மாட்டிகிராரு. எப்டி மாட்டுனாரு, அதுல இருந்து எப்டி மீண்டாரு அது தான் கதை. எல்லா உணர்வும் சம அளவுல இருந்த மாறி ஒரு ஃபீல். அப்பா சென்டிமென்ட் எனக்கு ஹைலைட். காளி வெங்கட் பிரமாதம். போலீஸ் அடிக்கிறப்போ "அப்பா"ன்னு கத்துனது புதுமை. இரண்டாம் பாதி சூப்பர். முதல் பாதி சுமார். தியேட்டர் ல பாத்து சப்போர்ட் பண்ணா இந்த மாதிரி படங்கள் இன்னும் வர வாய்ப்பா இருக்கும், பாருங்க!

"கொலை" - திரைப்படத்தின் விவரம்! "Kolai Movie Review"

Image
 திரும்பவும் பூட்டி கிடக்குற வீட்டுக்குள்ள ஒரு பொண்ணு டெட்பாடி இருக்கு. அந்த கொலையை  யாரு பண்ணா அப்டினு கண்டுபுடிக்க அவரால மட்டும் முடியும்னு சொல்றாங்க, அதோட அந்த மாறி மூளையை துரு பிடிக்க விடக்கூடாதுனு, சொல்லி விஜய் ஆண்டனிய காட்றாங்க. அவரு வந்து கண்டு பிடிச்சாரான்னு சொல்றது தான் இந்த கதை. உண்மையாவே technically brilliant, எல்லா டிபார்ட்மென்ட்-ம். ஆனா கதையும், திரைக்கதையும் டைடல் பார்க் சிக்னல் மாறி ரொம்ப slow ஆ தான் போகுது. அங்க இங்க கொஞ்சம் கட்டிங் போட்டு ஷார்ப் பண்ணி இருக்கலாம், ஆனா பண்ணல. எதோ ஒரு ஸ்டைல் ட்ரை பண்ணி இருக்காங்க பட் பர்சனல்-ஆ எனக்கு செட் ஆகல. நீங்க பாத்துட்டு சொல்லுங்க. 1.5x  ஸ்பீட்ல பாத்தா நல்ல இருக்கலாம் அமேசான்-ல! தங்கத்துல சமோசா செஞ்சி உள்ள உருள கிழங்கு இல்லனா எப்படி இருக்கும், அப்டி தான் இங்கயும்!

"ஜானகி ஜானே" - திரைப்படத்தின் விவரம்! Janaki Jaane Movie Review

Image
 சின்ன வயசுல நடந்த ஒரு விஷயத்தால இருட்டுனாலே பயப்புடற ஹீரோயின். இந்த உண்மை தெரிஞ்சி கல்யாணம் பண்ணிக்கிற ஹீரோ. இந்த பயத்த ஒரு கட்சி அரசியல் லாபத்துக்காக தப்பா frame பண்ணிடறாங்க. இந்த பயத்துலேந்தும், பிரச்னைலேந்தும் ஹீரோயின் மீண்டாங்கலா இல்லையா அது தான் கதை. காமடியா ஆரம்பிச்சி, நடுல செண்டிமெண்ட் ஆகி கடைசில பீல் குட் ஆ முடிச்சி இருக்காங்க. முழு படமும் 2 மணி நேரம் தான். மலையாள படம் தான் ஆனா நமக்கு தமிழ்லையும் இருக்கு ஹாட் ஸ்டார்ல. நேரம் இருந்தா பாருங்க!